just think

Wednesday, April 29, 2015

மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க கல்வித்துறை உத்தரவு

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர், எதிர்காலத்தில் படிக்க விரும்பும் உயர்கல்வி, பொறியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவுகள், வேலைவாய்ப்புகள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை, சிறந்த ஆலோசகர்கள், கல்வியாளர்கள் மூலம், கோடை விடுமுறையில் வழங்க வேண்டும்.

உயர்கல்வி பாடங்களுடன் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள், இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் அதற்குரிய கல்வித் தகுதிகள் குறித்த ஆலோசனைகளை, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சாதனையாளர்களோடு இணைந்து, ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment