just think

Wednesday, March 18, 2015

தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..!

1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

 3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்..!

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்ப்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.
10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி மணமாக இருக்கும்...



Thanks to TNKALVI

தமிழகம் முழுவதும் பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளிகளை கணக்கெடுக்க உத்தரவு

தமிழகம் முழுவதுமுள்ள அரசு பள்ளிகளில் ஓட்டை உடைசலாக இருக்கும் பள்ளிகள், கட்டடங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் நிலை, சரி செய்வதற்கான மதிப்பீடு குறித்து விரிவான அறிக்கை அனுப்ப, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மோசமான கட்டடங்களின் பட்டியல் வந்தவுடன் பட்ஜெட்டில், மானியக் கோரிக்கை அல்லது கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அவற்றை பராமரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூன்றாவது ஊக்கத்தொகை; பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு


10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 19) தொடங்க உள்ளது.

தேர்வு அட்டவணை

மார்ச் 19 வியாழக்கிழமை மொழிப்பாடம் முதல் தாள்

மார்ச் 24 செவ்வாய்க்கிழமை மொழிப்பாடம் இரண்டாம் தாள்

மார்ச் 25 புதன்கிழமை ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 26 வியாழக்கிழமை ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 30 திங்கள்கிழமை கணிதம்

ஏப்ரல் 6 திங்கள்கிழமை அறிவியல்

ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்

ஆகஸ்டில் அடுத்த டெட் தேர்வு 10000 ஆயிரம் பேருக்கு ஆசிரியராக வாய்ப்பு


பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு




பல்வேறு பாடங்களில் கூடுதலாக இளங்கலைப் பட்டங்கள் பெற்றாலும் பி.எட் படிப்பு ஒன்றே எல்லாவற்றிற்கும் போதுமானது; பள்ளிக்கல்வி இணை இயக்குநர்

ஓ.மு.எண் 100723/சி2/இ1/2012 நாள்-09/01/2013 ன் படி ஒருவர் ஏற்கனவே பெற்ற பி.எட் படிப்பானது தற்போது இளங்கலையில் வேறுபாடங்களை (மூன்று ஆண்டுகள் படிப்பாக) பயின்றவருக்கு ஏற்கனவே பயின்ற மேற்படி பி.எட் படிப்பு போதுமானதாகும்.
இது குறித்து மேலும் தகவல் பெற விரும்பினால் உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகவல் பெற்றுக்கொள்ளலாம்.

Saturday, March 14, 2015

இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.

 இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கான முதல் கட்டப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது.


சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் போட்டித் தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.


போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்படுவர்.

மொத்தம் 95 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில் 190 "அப்ஜெக்டிவ் டைப்' வினாக்கள் இடம்பெற்றிருக்கும் என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு இந்தத் தேர்வுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும். பெரும்பாலும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் போட்டித் தேர்வு நடைபெறும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, March 13, 2015

6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல்11-இல் தொடக்கம்

தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11 முதல் 21 வரை நடைபெற உள்ளன. 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை அமலில் உள்ளதால், இந்தத் தேர்வுகள் மூன்றாம் பருவத் தேர்வுகளாக நடைபெற உள்ளன.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கியது. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகள் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெற உள்ளன.
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்தும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மே முதல் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை(RESTRICTED HOLIDAY) எல்லா விடுப்புகளோடும் இணைத்து அனுபவிக்கலாமா?

அரசு கடித எண்.24686 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.4.4.1989ன்படி கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை (RESTRICTED HOLIDAY) தற்செயல் விடுப்பு,
ஈடுசெய் விடுப்பு ஆகிய விடுப்புகளோடு மட்டுமே இணைத்து அனுபவிக்கலாம். பிற விடுப்புகளோடு இணைத்து அனுபவிக்க இயலாது.

அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி" என்ற தலைப்பில் இரண்டு கட்டங்களாக (16.03.15 & 17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15) நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


Thursday, March 5, 2015

பிளஸ்-2 தேர்வு இன்று தொடக்கம்: மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளிகளில் சுவரொட்டி

DGE - XI ANNUAL EXAM 2015 REVISED TIMETABLE


மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் நிலையில், அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. BSNL நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை 50%-மாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 7-வது கட்ட விரிவாக்கப்பணிகள் ரூ.4800 கோடி செலவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் மாதத்திற்குள் அந்த பணிகள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதோடு அதன் பின் விலை குறைக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நெட்வொர்க் கெப்பாசிட்டியை அதிகரித்து நாடு முழுவதும் 2500 நகரங்களில் வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகளையும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் 2G டேட்டாவுக்கு வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக பி.எஸ்.என்.எல் 3G டேட்டாவை வழங்கி வருகிறது. குறிப்பாக, 1GB அளவு 3G இண்டர்நெட் ரூ.175-க்கும், 2GB ரூ.251-க்கும் வழங்கி வருகிறது.

Wednesday, March 4, 2015

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை துவக்கம் : 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.

தொடக்கக் கல்வி - வலைதளம் மூலம் சம்பளப் பட்டியல் தயார் செய்வது சார்பான இயக்குனரின் உத்தரவு

\

: E

தொடக்கக் கல்வி - 2014-15ம் ஆண்டு - ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு மின் கட்டணம் முழுவதும் செலுத்துவது சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்




தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டில் பயிலும் பார்வையற்ற குழ்ந்தைகளுக்கு கற்றலை எளிதாக்க சிறப்பு உபகரணங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிகளின் பெயர் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு




















தொடக்க நிலை / உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்து கலந்துரையாடல்" என்ற தலைப்பில் 14.03.2015 அன்று குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.