just think

Tuesday, November 25, 2014

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் தொகை திரும்ப வழங்குவது குறித்து அரசாணை மற்றும் தெளிவுரைகள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை என பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்


பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ரூ.2000/- ஊதிய உயர்வு நவம்பர் 2014 மட்டும் வழங்கவும், நிலுவைத் தொகையை நிதி நிலைமை கருத்தில் கொண்டு வருகின்ற மாதங்களில் வழங்கப்படும் என உத்தரவு


அகஇ - 2015-16ம் ஆண்டுக்கான புதிய தொடக்க / உயர் தொடக்கப் பள்ளிகள் தொடங்க கருத்துருக்கள் பெறுதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்



Thursday, November 20, 2014

TRB NEWS

அரசு பள்ளிகளில் பணிபுரிய உடற்கல்வி ,ஓவியம் ,இசை ,தையல் ஆசிரியர்கள் 1028 பேர் நியமனம் .
ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு நடத்தி பணிக்கு எடுக்கிறது . இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் .

மொத்தம் 100 மதிப்பெண்கள் ஆகும் .தேர்வு 95 மதிப்பெண்ணுக்கு 3 மணிநேரம் நடைபெறும் .objective முறையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் .190 கேள்விகள் இருக்கும் .ஒரு கேள்விக்கு  சரியாக பதில் அளித்தால் 1/2 மதிப்பெண் வழங்கப்படும் .மீதம் உள்ள 5 மதிப்பெண்ணுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் .

இதற்கான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது .

பள்ளிக்கல்வி - பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04.2014 முதல் மாத தொகுப்பூதியத்தில் ரூ.2000/- உயர்த்தி தமிழக அரசு உத்தரவு



அனைவருக்கும் கல்வித் திட்டம்: 1- 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழாண்டில் முக்கியத்துவம்

1 முதல் 3 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்விக்கு நிகழாண்டில் முக்கியத்துவம் வழங்க அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்ககம் திட்டமிட்டுள்ளது .இதன் மூலம் மாணவர்களுக்கு மிகக்குறைந்த வயதிலேயே மொழியறிவு ,கணித அறிவு போன்றவற்றில் புரிதலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன .பல்வேறு புதிய பிரிவுகளைக் கொண்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் நிகழாண்டில் வழங்கப்பட உள்ளன .

அரசாணை எண்.307 பள்ளிக் கல்வி (இ2) துறை நாள்.15.12.2000ஐ இரத்து செய்தல் ஆணை வெளியீடு

பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வாயிலாக இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்க்கல்வி தகுதிகாக ஊக்க உதிய உயர்வு வழங்கிட அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை எண்.307 பள்ளிக் கல்வி (இ2) துறை நாள்.15.12.2000ஐ இரத்து செய்தல் ஆணை வெளியீடு

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 24.11.2014 மற்றும் 25.11.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது

                         

                       

Wednesday, November 12, 2014

Monday, November 10, 2014

3-ஆம் ஆண்டில் ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் 


மதிப்புமிகு ஆசிரியப் பெருமக்களுக்கு! வணக்கம்.
  
   உயர்ந்த எண்ணங்களும் , இலட்சியங்களும் கொண்டு ஆசிரியர்களின் எதிர்கால நிலையினைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் நண்பர்களின் அன்பான அணுகுமுறையினால் 3-ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது . உங்கள் ஆதரவிற்கு மிகுந்த நன்றியினை காணிக்கையாக்குகின்றோம் .
    
  பல்வேறு சோதனைகளை எதிர்நோக்கி சுயநலமில்லாமல் உண்மையான ஆசிரியர் சங்கத்தினை எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கு தந்து விட்டுச்செல்லவேண்டும் என்பதே எமது நோக்கம் . மாஸ்டர் இராமுன்னி போன்ற சுயநலமில்லாத பொதுநலவாதியின் செயல்பட்டினைப் படிக்கும் போது இன்றைய சில சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஊழலை வளர்த்து தன் பையை நிரப்பும் நிலைக்கு தரம் தாழ்ந்து விட்டது .இதற்கு தீர்வுதான் என்ன ? நம்மிடையே விழிப்புணர்வு வளர வேண்டும் .அதற்கான முயற்சியில்தான் ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் தனது பயணத்தினைத் தொடர்கின்றது .

   நண்பர்களின் உண்மையான அன்பு , வீரம் , விவேகம் , செயல் ஆகியவற்றின் துணை கொண்டு நல்லதோர் இயக்கம் வளர்ந்திட உங்கள் மேலான ஆதரவினை என்றென்றும் தொடர்ந்திட உங்கள் ஒத்துழைப்பினை வேண்டுகின்றோம் .

                                 என்றென்றும் அன்புடன் 
                             ஆசிரியர் முன்னேற்றச் சங்கம்     

Wednesday, November 5, 2014

ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் மு.ஈசாக்கு ஜெயராஜ் அவர்கள் 04.11.2014 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது ஆன்ம இளைப்பாறுதலுக்காக பிரார்த்திப்போம்.

Tuesday, November 4, 2014

அடுத்த ஆண்டில் புதிய கல்விக் கொள்கை

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அடுத்த ஆண்டு வெளியிடப்பட
வாய்ப்பு இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள நெடும்பசேரியில் ஞாயிற்றுக்கிழமை 21ஆம் ஆண்டு சிபிஎஸ்இ கருத்தரங்கின் நிறைவு விழாவில் அவர் பேசியதாவது ;
    புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியை விரைவில் தொடங்கவுள்ளோம். கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு 7 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும். அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோர் அதை உருவாக்குவார்கள். இப்பணியில் முதல்வர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் ஆகியோரையும் ஈடுபடுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.